#BREAKING : அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்..! வெளியான அதிகாரபூர்வ தகவல்..!

The Enforcement Department said that the fixed deposit of Rs 41.9 crore in the Ponmudi bank account of the minister has been frozen.

Enforcement Directorate Logo

அமைச்சர் பொன்முடி வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கெளதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை விடிய, விடிய விசாரணை நடத்திய பின், அதிகாலை 3 மணி அளவில் அமைச்சர் பொன்முடி திரும்பிய நிலையில், இன்று மாலை மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.  இந்த நிலையில், சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி விசாரணைக்காக மீண்டும் ஆஜராகியுள்ளனர். இருவரிடமும் தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் (பிரிட்டிஷ் பவுண்ட்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

unknown node
#BREAKING : அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்..! வெளியான அதிகாரபூர்வ தகவல்..!