#BREAKING : மணிப்பூர் விவாகரம் – இரு அவைகளும் 7-வது நாளாக முடக்கம்..!

Both the Houses have been suspended for the seventh day due to agitation by the opposition parties

Loksabha adjourn 2pmm

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஏழாவது நாளாக முடக்கப்பட்டுள்ளது

கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 6 நாட்கள்  நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று 7-வது நாளாக நாடாளுமன்றம் கூடியது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஏழாவது நாளாக முடக்கப்பட்டுள்ளது. எதிர்  கட்சிகள் எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, 7-வது நாளாக இன்று நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் திங்கள் கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.