#Breaking:உள்ளாட்சி தேர்தல் – 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு...!

#Breaking: Local elections - 2nd phase of voting completed ...!

உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவானது.

இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில்,உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்டவாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.எனினும், 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.மேலும்,626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி,1,324 கிராம சபை ஊராட்சி தலைவர் பதவிக்கும்,10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு  நடைபெற்றது.

இதனையடுத்து,உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.