#BREAKING : கர்நாடகா பட்ஜெட் தாக்கல் – முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது  அணை கட்டுவது பற்றி அறிவிப்பு..!

Chief Minister Siddaramaiah announced the construction of Meghadatu Dam in the first budget of the Karnataka Assembly.

Siddaramaiah

கர்நாடக சட்டமன்றத்தில் முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது  அணை கட்டுவது பற்றி அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் சித்தராமையா.

கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடரில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர் முதல்வராக இருந்தபொழுது தாக்கல் செய்துள்ளார். இது அவரது ஏழாவது பட்ஜெட் ஆகும்.

இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது  அணை கட்டுவது பற்றி அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக கர்நாடகா பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கையை முதன்மையாக செயல்படுத்தப்படும். மேகதாது அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக பட்ஜெட்டில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.