#BREAKING : ஹெலிகாப்டர் விபத்து குறித்து உண்மையை வெளிவரும் வரை யூகம் செய்யாதீர்கள் : விமானப்படை

— Indian Air Force (@IAF_MCC) December 10, 2021

ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது.

குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள்  உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட 13  ராணுவ அதிகாரிகளின் உடல்களும் காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இதனையடுத்து, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து விமானப்படை சார்பில், ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள். விபத்துக்கான காரணத்தை அறிய முப்படைகளின் விசாரணை நடக்கிறது. விரைவாக விசாரணை நடத்தி உண்மைகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node
#BREAKING : ஹெலிகாப்டர் விபத்து குறித்து உண்மையை வெளிவரும் வரை யூகம் செய்யாதீர்கள் : விமானப்படை