திமுக ஊழல் பட்டியல் நாளை வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னோட்ட வீடியோ மூலம் அறிவித்துள்ளார். .
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் தொடர்பான விவாதம் தமிழக அரசியலில் திமுக மற்றும் பாஜகவினரிடைய பெரும் பேசுபொருளாக மாறியது. ரபேல் வாட்ச் தொடர்பான பில் எங்கே என திமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
அண்ணாமலை அறிவிப்பு :
இந்நிலையில், ஏப்ரல் 14 ஆதாவது சித்திரை 1ஆம் தேதி (நாளை) ரபேல் வாட்ச் பில் உடன் சேர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள், முதலீடு விவரங்கள், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவரங்கள் ஆகியவை பட்டியல் போட்டு வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
DMK Files :
அண்ணாமலை அறிவித்தது போலவே, நாளை வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதற்கான முன்னோட்ட விடியோவை வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் DMK Files (திமுக பட்டியல்) என தலைப்பிடப்பட்டு அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
புகைப்படங்கள் :
அந்த வீடியோவில், மறைந்த முன்னாள் முதலவர் கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி எம்பி, எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
காலை 10:15 மணி :
நாளை காலை 10:15 மணிக்கு வீடியோ வெளியிடப்படும் என அந்த வீடியோவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். நாளை யாரை பற்றி எந்த சொத்து விவரம் வெளியாக போகிறதோ என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொண்டு இருக்க, சிலர் ரபேல் வாட்ச் பில்லையும் அண்ணாமலை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என பேசி வருகின்றனர்.
unknown node