#BREAKING : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது..! ஈபிஎஸ் வேட்புமனுத்தாக்கல்..!

அதிமுக பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அதிமுக பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.  தேர்தலில் போட்டியிட  இன்று முதல் நாளை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மார்ச் 26 ஆம் தேதி காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரை பொதுச் செயலாளர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுக பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர் 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருப்பது அவசியம். தலைமை கழக பொறுப்புகளில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். போட்டியிட விரும்புவோர் பெயரை பத்து மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர் வழிமொழிய வேண்டும்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.25,000 கட்டணம் செலுத்தி விருப்பமனுவை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. மனுவை திரும்ப பெற 21-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

#BREAKING : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது..! ஈபிஎஸ் வேட்புமனுத்தாக்கல்..!