நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்..!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

BorisJohnsonresigns

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அவர் பிரதமராக இருந்தபோது, கொரோனா காலக்கட்டத்தில் விதிகளை மீறி அரசாங்கக் கட்டடங்களில் பார்டி நடத்தியுள்ளார்.

இதனால், அவர் நாடாளுமன்ற அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரிக்க, காமன்ஸ் சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில் சிறப்புரிமைக் குழு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத்தின் நேர்மையை ஜான்சன் கேள்விக்குள்ளாக்கியதாக கூறியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் டோரி எம்பி பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து குழுவிடமிருந்து வந்த கடிதத்தை பார்த்த ஜான்சன், தன்னை விசாரணை செய்பவர்கள் கங்காரு போல செயல்படுவதாகவும், தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.