வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு மலர்களை பாதுகாப்பதாக பாசாங்கு செய்யும் பாஜக அரசு – சு.வெங்கடேசன் எம்.பி

சிறுபான்மையினரின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

சிறுபான்மையினரின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (Pre Matric Scholorship) அடியோடு நிறுத்தப்பட்டது குறித்து ஒன்றிய அரசின் சிறுபான்மை நல அமைச்சர் மாண்புமிகு ஸ்மிருதி ஜூபின் ராணி அவர்களுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.

ஒன்றிய அமைச்சரின் பதில்

இதற்கு ஒன்றிய அரசின் சிறுபான்மை நல அமைச்சர் மாண்புமிகு ஸ்மிருதி ஜூபின் ராணி  பதில் கடிதம் அபிப்பியுள்ளார்.  கூறியுள்ளார். அதில், சிறுபான்மை சமூகங்களை சார்ந்த மாணவர்கள் துவக்க நிலை, இடை நிலை கல்வி பயில்வது தேசிய சராசரிக்கு இணையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு 1 – 8 வகுப்புகளுக்கு கல்வித் தொகை வழங்கப்படாததால் ஒரே அளவுகோலுக்கு சிறுபான்மையினரையும் கொண்டு வருவதாகவும் அவர் அந்த பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

unknown node

இந்த கடிதத்தை சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தம். எனது கடிதத்திற்கு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் ராணிபதில். கொடுத்ததை பறிப்பதன் மூலம் சமத்துவத்தை உருவாக்குகிறார்களாம்.

துவக்கநிலைக்கான உதவித்தொகையை பறித்துவிட்டு மேல் நிலைக்கல்விக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்களாம்.வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு மலர்களை பாதுகாப்பதாக பாசாங்கு செய்யும் பா ஜ க அரசு. சிறுபான்மையினரின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை என பதிவிட்டுள்ளார்.

unknown node
வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு மலர்களை பாதுகாப்பதாக பாசாங்கு செய்யும் பாஜக அரசு – சு.வெங்கடேசன் எம்.பி