புதுச்சேரி சட்டப்பேரவையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை..!

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை.

சுற்றுசூழலை பாதுகாக்கும் வண்ணம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சபாநாயகர் செல்வம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.