இந்திய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு விருது…!
தமிழகத்தை பொறுத்தவரையில், மருத்துவ துறையில் நாளுக்கு நாள் புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவ ரீதியாகவும் பல வளர்ச்சிகளை காண முடிகிறது. பல சிக்கலான சிகிச்சைகளை மேற்கொள்வதெற்கென பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13வது தேசிய உறுப்பு கொடை தினத்தையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் இருந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.