வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவிப்பு.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி
அந்த வகையில், ‘வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என்றும்,இளைஞர்களுக்கு தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க ரூ.25 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அம்பத்தூரில் இளைஞர்களுக்காக ரூ.120 கோடியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும் தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.