கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் – 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது..!

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், கடந்த

tamilnadu government

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், கடந்த 24-ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் விண்ணப்பதிவு முகாமினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், . மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, 2 கட்டங்களாக நடந்தமுகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.