தமிழகம் முழுவதும் 67,55,466 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போர் விவரம்
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 67,55,466 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின் படி, வேலைவாப்பிற்காக ஆண்கள் 31,47,605, பெண்கள் 36,07,589 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 272 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதில் 18-வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 18,74,522 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28,09,940 பேரும், 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி 18,34,217 பேரும், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2,30,976 பேரும், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 5,811 பேரும் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.
unknown node