திமுக ஊழல், சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட உள்ள நிலையில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 14 ஆம் தேதி ரபேல் வாட்ச் பில் உடன் சேர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள், முதலீடு விவரங்கள், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவரங்கள் ஆகியவை பட்டியல் போட்டு வெளியிடப்படும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஊழல் பட்டியலை வெளியிட உள்ள அண்ணாமலை
unknown nodeஇந்த நிலையில், நேற்று அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட வீடியோவில், இன்று 10:15 மணியளவில் ஊழல் பட்டியலை வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக ஊழல், சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.