அண்ணாமலை பேசியது அவர் சொந்த கருத்து – நயினார் நாகேந்திரன்

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என நயினார் நாகேந்திரன் கருத்து.

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என நயினார் நாகேந்திரன் கருத்து.

சென்னை அமைந்தகரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும், 2024 மக்களவையில் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியதாகவும் கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் பேட்டி

இந்த நிலையில், பாஜக மாநில துணை தலைவர்நயினார்நாகேந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் யாரும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துதான் வென்றுள்ளனர்; தனித்து போட்டியிடுவோம் என யாராலும் அறிவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.