அண்ணா சிலை தேசம் – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அண்ணா சிலையை சில விஷமிகள் களங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் என ஓபிஎஸ் பேட்டி.

அண்ணா சிலையை சில விஷமிகள் களங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் என ஓபிஎஸ் பேட்டி.

நேற்று விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, கரும்புள்ளிகளுடன் ஆ.ராசாவின் படத்தை தொங்கவிட்டுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெரியார் சிலையில் போர்த்தப்பட்டிருந்த துணியையும், ஆ.ராசா புகைப்படத்தையும் அகற்றி விட்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்,  தமிழகத்தை பொறுத்தவரையில் தலைவர்கள் ஆற்றிய நற்பணிகளுக்கு புகழ் சேர்க்கும் விதமாக திருவுருவ சிலை வைக்கப்படுவது பண்பாடாக இருந்து வருகிறது. அதன்படி வைக்கப்பட்டு இருந்த அண்ணா சிலையை சில விஷமிகள் களங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.