#Breaking:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம்..!

An all-party meeting will be held at 5 pm today under the chairmanship of Tamil Nadu Chief Minister MK Stalin.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால்,கடந்த 10 ஆம் தேதியிலிருந்து மே 24 ஆம் தேதி வரை சிலதளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனா பரவலை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின்,மாநில அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனுக்குடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில்,கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அதன்படி,இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள 13 கட்சிகளின் சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக,ஒவ்வொரு கட்சியில் இருந்தும் சுமார் 2 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,இன்று மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில்,கொரோனா பரவல் அதிகரிப்பதைக் கட்டுபடுத்த தமிழக அரசு செய்து வரும் பணிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.