அமித்ஷாவுடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை சந்திப்பு..!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இருந்தும் இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடியையும் தம்பிதுரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழந்துள்ளது. முன்னதாக, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக சார்பில் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் சந்தித்து பேசியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.