அதிமுக பெயரை வேறு யாரும் பயன்படுத்தினால் கிரிமினல் கேஸ் போடுவோம் என பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு இருந்த நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கர்நாடகா தேர்தலை சுட்டிகாட்டடி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.
ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிப்பு
unknown nodeஇந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகின்றனர்.
கிரிமினல் கேஸ் போடுவோம்
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக; இனிமேல் ஏறுமுகம்தான், அதிமுக பெயரை வேறு யாரும் பயன்படுத்தினால் கிரிமினல் கேஸ் போடுவோம் என தெரிவித்துள்ளார்.