அதிமுக தற்போது நான்காக உடைந்துள்ளது – பிரேமலதா

பாஜக-அதிமுக கூட்டணியாக இருந்து கொண்டு, ஒருவரையொருவர் விமர்சிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என பிரேமலதா விமர்சனம்.

பாஜக-அதிமுக கூட்டணியாக இருந்து கொண்டு, ஒருவரையொருவர் விமர்சிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என பிரேமலதா விமர்சனம்.

பிரேமலதா பேட்டி

புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எத்தனையோ கட்சிகள் பயந்து ஒதுங்கி இருந்தது. ஆனால் நாங்கள் தைரியமாக களத்தில் நின்றோம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஒரு தேர்தலே கிடையாது. மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்கும் முதல் கட்சி நாங்கள் தான். அதே போல் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முதலில் தட்டிக்கேட்கும் கட்சியும் நாங்கள் தான்.

அதிமுக நான்காக உடைந்துள்ளது. பாஜக-அதிமுக கூட்டணியாக இருந்து கொண்டு, ஒருவரையொருவர் விமர்சிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. அவர்களது கட்சி பிரச்சனை. அதை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.