அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க, இபிஎஸ் கொடுத்த மனு விசாரணையை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதி மன்றம்.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இந்த விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
unknown nodeஅங்கு எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைத்தனர். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதால் வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவிட வேண்டும் என எடப்பாடி தரப்பு வாதம் செய்தனர்.
unknown nodeஇதனையடுத்து, இந்த விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. எனவே, வரும் 12-ஆம் தேதி புதன்கிழமை எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள மனு விசாரணை செய்யப்படும் என கூறப்படுகிறது.
unknown nodeமுன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் எதிரான ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.