அதிமுகவினர் பேசுவதை நேரலை செய்யவில்லை..! எஸ்.பி. வேலுமணி புகார்..!

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அதிமுக கொறடா வேலுமணி பேட்டி.

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அதிமுக கொறடா வேலுமணி பேட்டி.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், மக்கள் பிரச்சனைத் தொடர்பாக அதிமுகவினர் பேசுவதை நேரலை செய்யவில்லை என அதிமுக கொறடா வேலுமணி பேட்டியளித்துள்ளார்.

பென்னி குயிக் சிலை :

தமிழக மக்களுக்காக பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டிய பென்னி குயிக்கிற்கு, தமிழகத்தில் மரியாதை செலுத்துவது போல, அவரது சொந்த ஊரான லண்டனிலும் மரியாதை அளிக்கும் விதமாக தமிழக அரசால் சிலை வைக்கப்பட்டது.

இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் :

சட்டப்பேரவையில் தற்போது, பென்னிகுயிக் சிலை லண்டனில் கறுப்புத் துணியால் மூடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் லண்டனில் நிறுவப்பட்ட பென்னிகுயிக் சிலை, சேதமடைந்து, மூடப்பட்டிருப்பதாக இபிஎஸ் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர்கள் பதில் :

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், இது குறித்த விவரங்களை அரசு அறிந்து சரியான நடவடிக்கைகளை எடுத்து சட்டசபையில் தெரிவிப்போம் என்று உறுதி அளித்தார். மேலும், பதிலளித்த அமைச்சர் சாமிநாதன் பென்னி குயிக் சிலை மூடப்படவில்லை, நல்ல முறையில் இருப்பதாக சட்டப்பேரவையில் விளக்கமளித்திருக்கிறார்.

அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு:

இதனைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் பென்னிகுவிக் சிலை குறித்த இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் நேரலை செய்யப்படவில்லை என அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.   இதற்கு விளக்கம் அளித்த கொறடா வேலுமணி,  மக்கள் பிரச்சனைத் தொடர்பாக அதிமுகவினர் பேசுவதை நேரலை செய்யவில்லை, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சையும் ஒளிபரப்புவதில்லை என கூறினார். மேலும், சட்டப்பேரவை இந்த நடவடிக்கையை புறக்கணிப்பதாக அதிமுக கொறடா வேலுமணி பேட்டியளித்துள்ளார்.