சென்னை கொருக்குப்பேட்டையில் முத்தமிழ் நகரில் நடிகர் விஜய் பயிலகத்தை புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும்,மாணவர்களுக்கு என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே நடிகர் விஜய் பயிலகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, சென்னை கொருக்குப்பேட்டையில் முத்தமிழ் நகரில் நடிகர் விஜய் பயிலகத்தை புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
