ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சொல்வது சரிதான் – டிடிவி தினகரன்

TTV Dhinakaran opined that actor Vijay is right in saying that he should not take money for votes.

TTV DHINAKARAN

ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சொல்வது சரிதான் என டிடிவி தினகரன் கருத்து.

நடிகர் விஜய் 10, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி, மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜயின் இந்த கருத்து குறித்து டிடிவி தினகரன், பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் நல்ல கருத்தை எடுத்து சொல்வதை பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும்; ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சொல்வது சரிதான். விஜய் இத்தகைய விசயத்தை சொல்வது நிறைய மக்களை சென்றடையும்; ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.