விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு இடங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்த நாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
unknown nodevijayletter [Imagesource : Twitter]
