11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -சட்டப்பேரவை செயலாளரிடம் மனு

அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து

அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

பின்னர் நடைபெற்ற வழக்கின் விசாரணையில்,நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும் சபாநாயகர் உரிய முடிவு எடுப்பார் என்று நம்புவதாக கூறி வழக்கின் விசாரணையை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில்  திமுகவின் தங்கத்தமிழ்செல்வன் தமிழக சட்டப்பேரவை செயலாளரை சந்தித்துஅரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.