வைரமுத்துவுக்கு ஒரு நியாயம்? பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு  ஒரு நியாயமா? – அண்ணாமலை

Wrestlers don't trust Supreme Court? As Annamalai question.

annamalai

மல்யுத்த வீரர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என அண்ணாமலை கேள்வி.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மல்யுத்த வீரர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? இது தொடர்பாக  விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, கைது செய்தால் தான் போராட்டத்தை நிறுத்துவோம் என்பது தவறு என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  வைரமுத்து மீது பாடகி வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வைரமுத்துவுக்கு ஒரு நியாயம்? பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு  ஒரு நியாயமா? பிரிட்ஜ் பூஷன் பூஷன் சிங் மீது புகார் கூறிய மல்யுத்த வீரர்கள் தகுந்த ஆதாரங்களை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பழனிவேல் தியாகராஜனுக்கும் எங்களுக்கும் கருத்தியல் அடிப்படையில் வித்தியாசம் இருக்கலாம்; ஆனால் அவர் படித்தவர், பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்; அவரை முக்கிய துறையில் இருந்து மாற்றியது மதுரை மக்களுக்கு திமுக செய்த துரோகம்.

மாநில அரசு விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து மீண்டும் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். ஜூலை 9ஆம் தேதியுங்கள் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியுள்ளதாகும் அவர் தெரிவித்துள்ளார்.