சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்தவர்வி.பி.சிங் என தெரிவித்துள்ளார்.

வி.பி.சிங்-கிற்கு உருவச்சிலை

unknown node

சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும்.11 மாதங்கள் தான் பிரதமராக இருந்தார் என்றாலும், அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாகவி.பி.சிங்அவர்கள் நினைத்தார்கள். தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். தலைவர் கலைஞரை சொந்த சகோதரனைப் போல மதித்தார்கள் என தெரிவித்துள்ளார்.