வறுமையால் 2 உயிர்கள் பலி..! 7 நாட்கள் பிணத்துடன் இருந்த குடும்பத்தினர்..! கேப்டன் வேதனை..!

ஓட்டுக்காக விளம்பர அரசியல் செய்யாமல் உண்மையில் மக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என கேப்டன் வேதனை.

ஓட்டுக்காக விளம்பர அரசியல் செய்யாமல் உண்மையில் மக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என கேப்டன் வேதனை.

கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை,புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன்,அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவம் குறித்து கேப்டன் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

unknown node

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகிப் போனது.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில், வறுமையால் இன்று இரண்டு உயிர்கள் உயிரிழந்திருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. வறுமையை போக்காமல் மக்களின் உயிர்கள் பறிபோக காரணமாக இருக்கும் அரசியல்வாதிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் ஓட்டுக்காக விளம்பர அரசியல் செய்யாமல் உண்மையில் மக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். பசியால் இனி ஒரு உயிர் கூட போகாத நிலையை உருவாக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

unknown node