வேளாண் சட்டங்ளுக்கு எதிர்ப்பு -குடியரசுத்தலைவர் உரையை புறக்கணிக்க 16 கட்சிகள் முடிவு முடிவு

16 opposition political parties to boycott President’s address tomorrow in Parliament in protest against the three central FarmLaws

நாடாளுமன்ற  கூட்டத்தொடரை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும், நாளை  முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நாடாளுமன்ற  கூட்டத்தொடரை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.அதாவது வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, நாடாளுமன்ற கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்ற உள்ள உரையை காங்கிரஸ் ,திமுக  உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.