தொழிலார்களின் விருப்பமின்றி 12 மணிநேர வேலை வழங்க கூடாது – அமைச்சர் கணேசன்

ஐடி நிறுவனங்கள், காலணி ஆலைகள் 12 மணி நேர வேலையை  எதிர்பார்க்கின்றன அமைச்சர் கணேசன் பேட்டி.

ஐடி நிறுவனங்கள், காலணி ஆலைகள் 12 மணி நேர வேலையை  எதிர்பார்க்கின்றன அமைச்சர் கணேசன் பேட்டி.

தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

அமைச்சர்கள் விளக்கம்

இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் தங்க தென்னரசு மற்றும் கணேசன் ஆகியோர் இதுகுறித்து விளக்கம் அளித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுகையில், ‘நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

unknown node

எல்லா நிறுவனங்களுக்குமல்ல, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகவே இந்த சட்டம்; வேலை பார்க்கக்கூடியவர்கள் அவர்களாக விரும்பினால் தேர்வு செய்யலாம்; 4 நாட்கள் பணியாற்றி 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், அல்லது வேறுபணியை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கணேசன் அவர்கள் கூறுகையில், தொழிலார்களின் விருப்பமின்றி 12 மணிநேர வேலை வழங்க கூடாது. மின்னணுவியல், ஐடி நிறுவனங்கள், காலணி ஆலைகள் 12 மணி நேர வேலையை  எதிர்பார்க்கின்றன. முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத் தன்மையை விரும்புகின்றன என தெரிவித்துள்ளார்.