தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என நேற்று அறிவிக்கப்பட்டது. வேலை வாய்ப்பினை பெருக்கிடும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் மசோதா நிறுத்திவைக்கப்படுகிறது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சட்டபேரவையில் அறிவித்திருந்தார்.
unknown nodeஇதனையடுத்து, பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
unknown nodeயார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து, நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்பட வேண்டும். அது தான் ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். இதற்காக, முதலமைச்சர் மு.க,ஸ்டாலின்அவர்களைப் பாராட்டுகிறேன். மேலும்,12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
unknown node