பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அரசு வேலைகளில் 10% இடஒதுக்கீடு..!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு செய்து முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புதல்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு செய்து முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புதல்.

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மொத்தம் 40 திட்டங்களுக்கு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) மாவட்ட அளவிலான வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்து ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்தது.

அது மட்டுமல்லாமல், 1 லட்சம் கிணறுகள் கட்டுவதற்கான பிர்சா பாசன கிணறு ஊக்குவிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும், ரூ.195 கோடி செலவில் சாய்பாசா மற்றும் தும்காவில் இரண்டு குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மகாராஷ்டிரா நாலெட்ஜ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Maharashtra Knowledge Corporation) போன்று ஜார்கண்ட் நாலெட்ஜ் கார்ப்பரேஷன் (Jharkhand Knowledge Corporation) லிமிடெட் அமைப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.