வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது.
பொதுவாக விழாக்கள் திருமணங்கள் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் வாழையிலை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வாழை இலையை பயன்படுத்துவதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும் என்பது பற்றி இதுவரை பலரும் அறியாமல் உள்ளனர். வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது.
unknown nodeஇன்றுபலரும் உணவை தவிர்ப்பதால் குடலில் அல்சர் அதாவது குடல் புண் ஏற்படுவதனால் வாயில் புண் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு வாழை இலையில் சாப்பிடும்போது வாய்ப்புண் குணமாகும். அதுபோலவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உணவை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதை வாழை இலையில் பார்சல் செய்தால் அந்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.
unknown nodeதீக்காயம் ஏற்பட்டவர்கள் உடைக்கு பதிலாக வாழையிலை தான் பயன்படுத்தப்படுகிறது. தீக்காயம் ஏற்பட்ட பின் அவர்களை வாழை இலையின் மீது படுக்க வைப்பர். ஏனென்றால், வாழையிலையில் சூட்டின் தாக்கத்தை குறைக்கும் தன்மை அதிகமாக உள்ளது.
பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் படுக்கவைத்து, காலையில் சூரிய ஒளியில் காட்டினால், சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். மேலும் காயம், தோல் புண்களுக்கு ஏற்படும் போது தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து, புண்மேல் தடவி, வாழை இலையை மேலே கட்டு கட்டி வைத்தால் புண்கள் விரைவில் குணமாகும்.