10 நிமிடம் போதும் அட்டகாசமான உருளைக்கிழங்கு சாதம் செய்யலாம் ....!

Learn how to make delicious potato rice in 10 minutes

மதிய நேரத்தில் ஏதாவது குழம்பு செய்து சாப்பிடுவது வழக்கம் தான். ஆனால், பிஸியான சமயங்களில் பசி எடுத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதற்கு பதிலாக, அட்டகாசமான சுவை கொண்ட உருளைக்கிழங்கு சாதத்தை செய்து சாப்பிடலாம். இந்த உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு

சாதம்

இஞ்சி பூண்டு விழுது

நெய்

வெங்காயம்

மிளகாய் தூள்

மல்லித்தூள்

சீரகத்தூள்

கரம்மசாலா

மஞ்சள்தூள்

கடுகு

தயிர்

எண்ணெய்

உப்பு

கொத்தமல்லி

கருவேப்பிலை

செய்முறை

தாளிப்பு :முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு நெய்யும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கலவை :வெங்காய கலவையில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு அவிய விட வேண்டும். பின் பின் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கிழங்கு நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

சாதம் :இவற்றில் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி தழையை  சேர்த்து இந்தக் கலவையை இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் அட்டகாசமான உருளைக்கிழங்கு சாதம் தயார்.