மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம்..! தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தில் அருமையான வேலை..!

National Health Organization Resource Center has published a notification to fill the vacant post.

NHSRC Recruitment 2023

தேசிய சுகாதார அமைப்பு வள மையம் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய சுகாதார அமைப்பு வள மையம் (NHSRC) என்பது தேசிய ஊரக சுகாதார இயக்கத்திற்கு (NRHM) பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்குவதற்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பதிவுசெய்யப்பட்ட சங்கமாகும்.

தற்பொழுது, இந்த தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாக உள்ள பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்கு ஒப்பந்த முறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்Notificationஅதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணபிக்கலாம்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தில் பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளது. எனவே, ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரரின் வயது:

பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் வயது 40 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்குNotificationஅதிகாரபூர்வ அறிவிப்பை அணுகலாம்.

பணியிடம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் புதுடெல்லியில் பணியமர்த்தப்படுவார்.

விண்ணப்பதாரரின் தகுதி:

விண்ணப்பதாரர் மருத்துவம் அல்லது நர்சிங்கில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொது சுகாதாரம், சமூக சுகாதாரம், தடுப்பு மற்றும் சமூக மருத்துவம், சுகாதாரம் அல்லது மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது உயர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய சுகாதார பணி/ தேசிய சுகாதார திட்டங்கள்/ சுகாதார திட்டமிடல்/ சுகாதார கொள்கை மற்றும் வக்கீல்/ பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல்

சுகாதார பராமரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை படிப்பு முடித்து குறைந்தது 2 ஆண்டுகள் பனி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் பொறுப்புகள்:

மாநிலங்களில் அமலாக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய அவ்வப்போது கண்காணிப்பு வருகைகளை மேற்கொள்ளுதல்.

அறிக்கைகளை தயாரித்து, மாநிலங்களின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து பின்தொடர்தல்.

ஆரோக்கியத்தில் பணிபுரியும் பல்வேறு பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நிரல் ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் பிற திறன்-கட்டுமானப் பொருட்களை ஒருங்கிணைத்தல்.

சுகாதார மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு, காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் போன்ற பல்வேறு தரவு மூலங்கள் மூலம் ஆதாரங்களை உருவாக்குவதற்கான தரவை பகுப்பாய்வு செய்தல்.

தேசிய, பிராந்திய மற்றும் மாநில அளவிலான பட்டறைகள் மற்றும் குறிப்பிட்ட தொழில்நுட்பப் பகுதிகளில் மாநிலங்களை நோக்குநிலைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அமைப்பதில் பிரிவை ஆதரித்தல்

ஒப்பந்த காலம்:

பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்காண ஒப்பந்த காலமானது  31 மார்ச் 2025 வரை உள்ளது. இதற்கான நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மற்ற காலி பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படலாம்.

சம்பள விவரம்:

பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இந்த பணி குறித்த மேலும் விவரங்களுக்குNotificationஅதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttp://nhsrcindia.orgஉள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை திறக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தில் கேட்டகப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து அத்தியாவசியத் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இறுதியாக விண்ணப்பதாரர் பதிவுக் கட்டணம் செலுத்திவிட்டு, சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

கடைசி தேதி:

விண்ணப்பங்களை சரியாக நிரப்பி ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 13 ஆகும். இது குறித்த மேலும் தகவலுக்குNotificationஅதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.