இன்றே விண்ணப்பிங்க...மாதம் 1,25,000 சம்பளம்...இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு...!!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், கிட்டத்தட்ட

TWAD Jobs 2023

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், கிட்டத்தட்ட மொத்தமாக 5 இடங்கள் மட்டுமே உள்ளது.

மேலும், இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் ஒரு வருடத்திற்கு நிரப்பப்பட உள்ளது. எனவே, இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள் உடனடியாக வரும் 11.05.2023 தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

1.தொழில்நுட்ப ஆலோசகர் (Technical Advisor)

இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் ( Degree in Engineering or Technology) படித்திருக்க வேண்டும். முக்கியமாக மேலும், 30 வருட பணி அனுபவம் அவசியம் வேண்டும்.

2.மண்டல ஒருங்கிணைப்பாளர் ( Regional Co-Ordinator)

இந்த வேலையில் சேர விண்ணப்பிப்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் (Degree in Engineering or Technology ) படித்திருக்க வேண்டும். மேலும் 30 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் எவ்வளவு..?

தொழில்நுட்ப ஆலோசகராக வேலை செய்பவர்களுக்கு மாதம் 1,25,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதைபோல், மண்டல ஒருங்கிணைப்பாளராக வேலை செய்பவர்களுக்கு மாதம் ரூ. 1,00,000

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள்https://www.twadboard.tn.gov.in/sites/default/files/TA_Notice-merged_0.pdfஎன்ற இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பிரிண்ட் எடுத்துக் கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் கொண்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்Joint Chief Engineer (CoM), TWAD Board, Head Office, Chennai – 600005என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்..?

இந்த வேலையில் சேர விரும்புவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தபட்டு அதனுடைய அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இன்றே விண்ணப்பிங்க...மாதம் 1,25,000 சம்பளம்...இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு...!!