இன்று வெளியாகும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் ..!விபரம் இதோ..!

The Department of Education has announced that the Class 12 marks will be released today.

இன்று 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் ஆல் பாஸ் என கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.அதன்படி,

https://tnresults.nic.in/,

https://dge1.tn.nic.in/,

http://www.dge2.tn.nic.in/,

http://www.dge.tn.gov.in/ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளி மாணவர்கள் வரும் 22ம் தேதி காலை 11 மணி முதல்http://www.dge.tn.gov.in/மற்றும்http://www.dge.tn.nic.in/என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.