"தமிழ்நாடு அரசு பாட புத்தகம்;மத்திய அரசு என்பதற்கு பதில் இனி இவை இடம் பெறும்" – ஐ.லியோனி..!

I. Leoni has said that the Tamil Nadu government will appear in school textbooks as 'Union Government' instead of Central Government

தமிழ்நாடு அரசு பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதில் ‘ஒன்றிய அரசு’ என இடம்பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில்,பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி அவர்கள் பதவி வகித்தார்.

இதனையடுத்து,தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்,கல்வியியல் பணிகள் மற்றும் கழக தலைவராக ஐ.லியோனி அவர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில்,ஐ.லியோனி அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:”வருகின்ற 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு பள்ளிப்பாட புத்தகங்களில்மத்தியஅரசுஎன்பதற்குபதில்‘ஒன்றியஅரசு’எனஅச்சிடப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான “கலைமாமணி” விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.