#Breaking News : நிவர் புயல் எதிரொலி – CA தேர்வுகள் ஒத்திவைப்பு

Examinees in some cities of Tamil Nadu and Pondicherry with regards to ICAI November 2020 Examinations  - ICAI

இன்றும் நாளையும் நடைபெறவிருந்த CA தேர்வுகள் நிவர் புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது.நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் , காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த CA தேர்வுகள் நிவர் புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, கும்பகோணம், காரைக்குடி,புதுக்கோட்டை & புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node