#Breaking:தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – தேர்வுத்துறை அறிவிப்பு!

#Breaking: Postponement of Class VIII General Examinations for Individuals - Examination department Announcement!

தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்த நிலையில்,தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,தொடர் மழை காரணமாக நவம்பர் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.

வரும் நாட்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் முழுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும், புதிய தேர்வுக்கான அட்டவணைகள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.