தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.20 முதல் டிச.24 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் நவம்பர் 12 வரை நடைபெற இருந்த நிலையில்,அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்,தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.20 முதல் டிச.24 வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இப்பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 14 ஆம் தேதி முதல்http://dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.