பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமா? – இன்றைய நிலவரம் என்ன?..!

Will there be a change in petrol and diesel prices? - What is the situation today? ..!

சென்னை:51-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.91.43-க்கும் விற்பனை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

எனினும்,கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.51-வது நாளாக மாற்றமில்லாமல் ஒரே விலையிலேயே பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.