இன்றைய நாளின் (31.01.2023) ராசிபலன்கள்..!
மேஷம்: இன்று நீங்கள் உங்களுடைய பொறுமையை இழக்க நேரிடலாம். இன்று பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமான நாளாக அமையாது.நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது.கண்கள் மற்றும் தொண்டை எரிச்சல்கள் ஏற்படலாம்.
ரிஷபம்: இன்று நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திற்கும் பொறுமை ரொம்பவே அவசியம். உங்களுடைய வேலைகள் இரன்டு கடினமாக இருக்கும். தேவையில்லாமல் பணங்களை செலவு செய்யலாம்.
மிதுனம்: நீங்கள் இன்று மைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு இன்று பணவரவு அதிகமாக காணப்படாது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
கடகம்: இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்கள் மேலதிகாரியிடமிருந்து பதவி உயர்வு என்ற பெயரில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
சிம்மம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் கடின முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். செலவுகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும் காரணத்தால் இன்று கணிசமான தொகையை உங்களால் சேமிக்க முடியாது.
கன்னி: இன்றயை நாள் உங்களுக்கு சுமாராக இருக்கும். ஏனென்றால், பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணத்தை குறைந்த அளவே செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.
துலாம்: இன்று நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். நீங்கள் வேலைசெய்யும் இடத்தில மற்ற பணியாளர்களுடன் சில மோதல்கள் காணப்படும். உங்களுக்கு இன்று பண இழப்புகள் ஏற்படலாம்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் உங்களுடைய வேலைகள் அனைத்தையும் வெகுவிரைவில் முடித்து விடுவீர்கள் பணமும் அதிகம் செலவு செய்ய மாட்டீர்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
தனுசு: இன்று உங்களுக்கு ஆபத்தான நாளாக அமையும். வேலைகள் அதிகமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் இருக்காது. ஆடை ஆபரணம், ஆடம்பரப் பொருட்கள் போன்ற பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.
மகரம்: இன்று நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இன்று சோர்வுடன் காணப்படுவீர்கள். கூடுதல் சுமைகள் காரணமாக இன்று பணத்தை அதிக அளவில் செலவு செய்ய வாய்ப்பு உள்ளது. உங்கள் மனதில் தோன்றும் அமைதியற்ற உணர்வுகளின் காரணமாய் அசெகரியங்களை உணர்வீர்கள்.
கும்பம்: இன்று நீங்கள் வெற்றிகாண்பது என்பது கடினம்.பணவளர்ச்சி காண்பது கடினமாக இருக்கும். பணஇழப்புகள் ஏற்படலாம்.தொண்டையில் தொற்று ஏற்படலாம். வெந்நீர் குடிப்பதன் மூலம் நன்றாக உணரலாம்.
மீனம் : இன்று உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம் எனவே அதனை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் வெற்றி காண்பது கடினம்.தொண்டையில் தொற்று ஏற்படலாம். வெந்நீர் குடிப்பதன் மூலம் உபாதைகள் குறையலாம்.