இன்றைய நாள் (27.02.2023) ராசி பலன்கள்

இன்றைய நாள் (27.02.2023) ராசி பலன்கள்

மேஷம்:

இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் வெளியே பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் வேலையில் சில தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று பணத்தை நீங்கள் இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை வலி மற்றும் சளி பிரச்சனை ஏற்படும்.

மிதுனம்:

இன்று நீங்கள் செய்ய வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை விறுவிறுப்பாக முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுக்களை பெறுவீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கடகம்:

இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பணவரவு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும் சுறுசுறுப்போடும் இருப்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் பணி சுமையை நீங்களே வாங்கிக் கொள்வீர்கள். இன்று குடும்பத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தொண்டை வலி ஏற்படலாம்.

துலாம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் குறைந்தே காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பனித்துளி அதிகமாக இருக்கும். சில தவறுகள் செய்யவும் வாய்ப்பு உள்ளது. பணவரவு போதுமானதாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு மிகவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று நீங்கள் எதிர்பார்க்காத சில சுவாரசியமான சம்பவங்கள் நடக்கலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகள் அனைத்தையும் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பண வரவு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மகரம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

கும்பம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது, ஏற்றமும் இறக்கமும் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க மாட்டீர்கள். பண வரவு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

மீனம் :

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும். இந்த நாளில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து கொடுப்பீர்கள். பணவரவு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.