காதலர் தின ஸ்பெஷல்: இன்றைய நாளின் (14.02.2023) ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: 

இன்று உங்களுடைய மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று பணவரவு உங்களுக்கு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. இன்று காதலர் தினம் என்பதால் உங்களுடைய காதலர்களுடன் வெளியில் சென்றால் பார்த்து செல்லவும்.

ரிஷபம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும். பணவரவை பொருத்தவரை வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக வரும். இன்று ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. காதலர்களே இன்று நீங்கள் மன நிம்தியாக இருப்பீர்கள். உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீங்கள் இன்று பணம் அதிகமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சனையும் வராது. இன்று எந்த பிரச்சனை நடந்தாலும் கடக ராசி க்காரர்களே உங்கள் காதலர்களிடம் கோபப்படாதீர்கள். சாந்தமாக இருந்தால் இன்று நல்ல நாளாக அமையும்.

கடகம்: 

இன்று நீங்கள் சில வாய்ப்புகளை இழக்க நேரலாம். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதால் சற்று கவனத்துடன் இருங்கள். இன்று பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு சளி இருமல் பாதிப்புகள் ஏற்படலாம்.

சிம்மம்: 

இன்று நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் .ஏனென்றால், இன்று உங்களது பொறுமை சோதிக்கப்படலாம். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைப்பது சந்தேகம் தான். நிதி நிலைமை சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தை  பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். இன்று நீங்கள் உங்களுடைய காதலில் வெற்றிபெறுவீர்கள். ஒரு சிலர் தன்னுடைய பெருந்தன்மை காரணத்தால் ஏமாற்றத்தை சந்திக்க நேரலாம்.

கன்னி:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் குவியும் நாளாக அமையும் . வேலை செய்யும் இடத்தில் வெற்றியை காண்பீர்கள். இன்று கடின உழைப்பின் காரணமாக நீங்கள் வெற்றி பெறலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.கன்னி ராசி காரர்கள் காதலித்துக் கொண்டிருந்தாள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சாந்தமாக பேசுங்கள்.

துலாம்: 

இன்று நீங்கள் சில காரணங்களால் உணர்ச்சிவசப்படலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணி சுமை அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி குறைவாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை கால்கள் மற்றும் மூட்டுகளில் வலிகள் ஏற்படலாம். துலாம் ராசி பொருத்தவரை உங்கள் காதலர், காதலி இன்று அமைதி இருக்காது. எனவே சற்று பொறுமையாக இருந்தால் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்: 

இன்று நீங்கள் எந்த ஒரு செயல்களையும் செய்வதற்கு முன்பு யோசித்து திட்டமிடுங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை குறித்த நேரத்தில்  முடிப்பீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை பல்வலி ஏற்படலாம்.

தனுசு:

இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தை விட முயற்சியை நம்ப வேண்டும். வேலை செய்யும் இடத்தில் ஓய்வு கூட நேரம் கிடைக்காது. அந்த அளவிற்கு அதிகமாக பணி சுமை இருக்கும். இன்று பணம் உங்களிடம் குறைந்த அளவே காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சினையும் உங்களுக்கு இருக்காது.  தனுசு ராசி பொருத்தவரை இன்று பொறுமையும் , நிதானமும் வேண்டும் மற்றபடி உங்களுக்கும் இன்று சந்தோஷமான நாளாக அமையும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சந்தோசமாக இருப்பீர்கள்.

மகரம்: 

இன்று நீங்கள் அமைதியாக இருந்தால் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். இன்று உங்களுக்கு பணம் வரவு நன்றாக இருக்கும். மகிழ்ச்சியின் காரணமாக ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. மகர ராசி பொருத்தவரை சில காரணங்களால் உங்களுக்கு என்று உடல் நலக் குறைவு ஏற்படலாம் எனவே மற்றும் கவனமாக இருங்கள். மற்றபடி காதலன் , காதலியுடன் சந்தோசமாக இருப்பீர்கள்.

கும்பம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களுடைய வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் , வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும். நிதிநிலை அந்த அளவிற்கு சிறப்பாக இருக்காது ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. கும்ப ராசி பொருத்தவரை இன்று நீங்கள் முழுவதும் நேரத்தை உங்களுடைய காதலன், காதலியோடு தான் நேரத்தை செலவிடுவீர்கள்

மீனம் : 

இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதனை திட்டமிட்டு செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் கை கொடுக்காது. அஜாக்கிரதை காரணமாக இன்று நீங்கள் பணத்தை இழப்பீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கால் வலி ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது. மீனம் ராசியை பொருத்தவரை உங்களுக்கு இன்று மிகவும் சந்தோஷமான நாளாக அமையும். உங்கள் காதலன், காதலியோடு அருமையாக நேரத்தை  செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்