இன்றைய (09.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை முடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும். இன்று நீங்கள் பல ஆச்சரியங்களைக் காணலாம்.
ரிஷபம்: இன்று நீங்கள் சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். எதையும் நீங்கள் சகஜமாக எடுத்துக் கொண்டு சிறிது அனுசரித்து நடந்தால் செய்யும் வேலைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிரக்கவும்.
மிதுனம்: நீங்கள் இன்று பதட்டத்துடன் காணப்படுவீர்கள் பதட்டத்தை எப்படி குறைப்பதென்பதை கற்றுக்கொள்ளுங்கள். எந்தவிதமான எதிர்மறை எண்ணத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.
கடகம் : பதட்டம் காரணமாக சில முக்கியமான பொருட்களை நீங்கள் இழப்பீர்கள். உங்களை சகஜமாக வைத்திருக்க இசையைக் கேளுங்கள் அல்லது திரைப்படம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.
சிம்மம்: இன்றைய நாளில் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். விஷயங்கள் அனைத்தும் சுமுகமாக நடக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதன் காரணமாக வளர்ச்சி காணப்படும்.
கன்னி:இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பணிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். முக்கியமான முடிவுகள் இன்று நல்ல பலன்களைத் தரும். நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்களிடம் நகைச்சுவை நிறைய காணப்டும்.
துலாம்: இன்று நீங்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் உங்களுக்கு இன்று சாதகமாக இல்லை. உங்கள் முயற்சி தான் உங்களுக்கு புகழை பெற்றுத் தரும்.
விருச்சிகம்: இன்று பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். சிறந்த இசை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும்.
தனுசு: இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக காணப்படும். உங்கள் செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். இன்று உங்கள் செயல்களில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது.
மகரம்: உங்களிடம் வெவ்வேறு விஷயங்களில் சமநிலையான கருத்து காணப்படும். உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
கும்பம்: உங்களுக்கு இன்று புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறந்த நாள். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் பலன் கிடைக்கும். உங்களிற்கு தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். உங்கள் பணிகள் அனைத்தையும் எளிதில் முடிப்பீர்கள்.
மீனம்: உங்களுக்கு சூழ்நிலை சாதகமாக இருக்காது. உங்கள் தினசரி செயல்களை செய்வதை கடினமாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025