#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்...!

More than 100 people have complaints via email for Pubg Madan was cheated out of money.

பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலமாக புகார் அளித்து வருகின்றனர்.

பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த யூ-டியூபர் மதன் தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார்.

ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.பின்னர்,அவரது சொகுசு கார்கள்,லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர், பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து,பப்ஜி மதனின்  யூடியூப் சேனல்களை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்.

இதனையடுத்து,பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில்,பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலமாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.