#IPL2022: அரைசதம் விளாசிய மிச்சேல் மார்ஷ்.. பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – சர்பராஸ் கான் களமிறங்கினார்கள். இதில் வார்னர் டக் அவுட் ஆகி அதிர்ச்சியை கொடுக்க, மிச்சேல் மார்ஷ் களமிறங்கினார்.

தொடக்கம் முதலே மார்ஷ் அதிரடியாக அடிவர, மத்தியில் சிறப்பாக ஆடிவந்த சர்பராஸ் கான் 32 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய லலித் யாதவ் 24 ரன்கள் எடுத்தும், பண்ட் 7 ரன்கள் அடித்தும், பவல் 2 ரன்கள் அடித்து வெளியேற, மத்தியில் சிறப்பாக ஆடிவந்த மிச்சேல் மார்ஷ் அரைசதம் விளாசி 63 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.